சொல்கிறார்கள்: வெளிநாட்டு வாழ்க்கை சொகுசானது இல்லை!
சமூக வலைதள பிரபலமும், பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகளுமான, அமெரிக்காவில் வசிக்கும் பல்லவி:
அமெரிக்காவில் தனியார் தொழில்நுட்ப கம்பெனியில் வேலை பார்த்தபடியே, சமூக வலைதள பிரபலமாக இருக்கிறேன். என் குழந்தை பருவம் மிகவும் சந்தோஷமானதாக இருந்தது. வீட்டில் இசை தொடர்பான விவாதங்கள் நடந்தபடியே இருக்கும். எப்போதும் இசை சூழலிலேயே வளர்ந்திருக்கிறேன்.
கொஞ்ச நாள் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன். திருமணத்திற்கு பின், அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இங்கு வந்தும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடிக் கொண்டிருந்தேன். இசையமைப்பாளரின் மகள் என்பது எனக்கு பெருமையாக இருந்தாலும், எனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
