போதைப்பொருள் கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது
திருவனந்தபுரம்,கேரளம் மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவரது உறவினர் உள்பட சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
கேரளம் மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவரது உறவினர் உள்பட சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதில் இளம்பெண்ணை தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்று மது மற்றும் போதைப் பொருட்களை கொடுத்துள்ளனர். பின்னர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது.
மேலும் பாலியல் சம்பவத்தை செல்போன்களில் படம் பிடித்து வைத்து அந்த பெண்ணுக்கு மிரட்ட லும் விடுத்துள்ளனர். பலமுறை இந்த சம்பவம் நடைபெற்றுள்ள போதிலும் மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் இது பற்றி வெளியில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

