உதயநிதியின் பாராட்டு; கிருஷ்ணசாமியின் விமர்சனம்; கடந்து செல்லச் சொல்லும் திருமாவளவன்
ஆரம்ப காலத்தில் பட்டியல் சமூக மக்களின் உரிமைக்காக இணைந்து குரல் கொடுத்த கிருஷ்ணசாமியும், திருமாவளவனும், கால ஓட்டத்தில் இரண்டு துருவஙகளாக மாறிப்போனது மட்டுமின்றி, தற்போது ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு போய்விட்டது வருத்தமான விஷயம் தான்.
சமூக ஊடகத்தில் மோதிக்கொண்டிருக்கும் வி.சி.க - பு.த ஆதரவாளர்கள்.
வி.சி.க தலைவர் திருமாவளவனையும், அமைச்சர் வன்னி அரசுவையும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்ததுடன் "இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று, வன்னி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்' என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வி.சி.க ஆதரவாளர்களும், புதிய தமிழகம் கட்சி ஆதரவாளர்களும் சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் மாறி மாறி விமர்சித்து வருவது கருத்து மோதல் என்பதைக் கடந்து சமூக ரீதியான விமர்சனமாக மாறி சென்று கொண்டிருக்கிறது.



