அதிக நோட்டுப்புத்தக இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்பு குறைந்தபட்ச இறக்குமதி விலை தேவை
புதுடில்லி: ஆசியான் நாடுகளில் இருந்து குறைந்த விலையில் நோட்டுப்புத்தகங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்க, குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிக்க வேண்டும் என, அகில இந்திய நோட்டுப்புத்தக உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா - ஆசியான் நாடுகளிடையே , தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், 2010 ஜனவரியில் இருந்து நோட்டுகள் இறக்குமதிக்கு சுங்க வரி இல்லை. எனவே, இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசியான் நாடுகளில் இருந்து மிகக்குறைந்த விலையில் நோட்டுப்புத்தகங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின் றன.
மேலும், சுங்க வரி விலக்கு மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., விலக்கு சலுகைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி, உள்நாட்டில் கடுமையான போட் டியை ஏற்படுத்துகின்றன.

