நாசுக்காக மிரட்டி வாரி சுருட்டும் மா.க.வாரிய அதிகாரி!
“நில எடுப்பு பணிகள்ல வாரி குவிக்கறா ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, வெம்பூர் பகுதியில், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் எனும், 'சிப்காட்' வளாகம் அமைக்கும் பணியை, கடந்த தி.மு.க., ஆட்சியில் துவங்கினா... இதுக்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்துண்டு இருக்கு ஓய்...

