கொத்தமல்லி தழை வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
கரூர்; கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்துள்-ளதால், விலை குறைந்துள்ளது.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொத்த-மல்லி தழை, ஒரு கிலோ, 70 முதல், 80 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் நடப்பு மாதம், கரூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில், கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்தது. இதனால், புதிய கொத்தமல்லி தழை வரத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்-கெட்டுக்கு வர தொடங்கியுள்ளது. இதனால், விலை குறைந்து வருகிறது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்று பகுதிகளில், கொத்தமல்லி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டது. மழை காரணமாக, கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்தது. மேலும், தேனி மாவட்டம் சின்னமனுார், கம்பம், திண்டுக்கல் மாவட்டம், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் கொத்தமல்லி தழை வரத்து அதிக-ரித்து, கரூர் மார்க்கெட்டுக்கு வர தொடங்கியுள்-ளது.



