ஆளை விடுங்க சாமி!
'இனி, கட்சிக்காரர்களிடம் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும்...' என புலம்புகிறார், கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரான அஜய் தரம் சிங்.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், இங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில், இம்மாநில முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் மகன் அஜய் தரம் சிங்கிற்கு, அமைச்சர் பதவி தரப்பட்டது. அமைச்சர் கனவு நிறைவேறிய உற்சாகத்தில், சமீபத்தில் சொந்த ஊரான கலபுரகிக்கு திரும்பினார் அஜய்.

