ராஜராஜன் கால கல்வெட்டு தேரெழுந்துாரில் கண்டெடுப்பு
சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் வேதபுரீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜராஜன் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறையின், கல்வெட்டியல் பிரிவினர், தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, இதுவரை நகலெடுக்கப்படாத, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க, கல்வெட்டை கண்டறிந்தனர்.
கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள துாணில், சோழர் கால தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில், சிவனுக்கு அமுது படைக்க, பொன்னை தானமாக அளித்த தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது.




