போலி ரயில் டிக்கெட் விற்ற முகவர் கைது
சென்னை: போலி டிக்கெட் விற்பனை செய்படுவதாக, பயணியர் புகார் அளித்தனர். இதையடுத்து, சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில், ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பல்லாவரத்தில் உள்ள வணிக நிறுவனத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் சோதனையில் ஒருவர், சட்ட விரோதமாக, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்து, 47,957 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.


