கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி; ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்.
நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் ஏஐ காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி.



