சிறுவாணி ஆற்றில் முதியவர் சடலம் மீட்பு
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், அகளி அருகே உள்ள கோட்டத்தறை சிறுவாணி ஆற்றில் கடந்த 2ம் தேதி நண்பகல் 12:00 மணியளவில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டனர்.
உயிரிழந்தவர் சுமார் 168 செ.மீ உயரமும், 65 முதல் 70 வயது மதிக்கத்தக்க தோற்றமும் கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் யார் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.
தற்போது சடலம் மாவட்ட அரசு மருத்துவமனை பிணவறையில்வைக்கப்பட்டுள்ளது.