காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கண்ணாடி பெட்டிக்குள் 3 தேங்காய்கள் வைத்து வழிபாடு
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள 3 தேங்காய்கள்.
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் திங்கள்கிழமை 3 எண்ணிக்கையில் தேங்காய்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற சிறப்பம்சம் உள்ளது. அதாவது, சிவன்மலை முருகன் ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட்டதாகக் கூறி, அவா் கொண்டுவரும் சிறப்பு பூஜைப் பொருளை வைத்து, இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.



