மகளை கா்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை
கோபி அருகே மகளை கா்ப்பமாக்கிய வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள சிங்கிரிபாளையத்தைத் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (43), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனா். இந்நிலையில், மனைவி மற்றும் இரு மகள்கள் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு கடந்த 2024 மே 11-ஆம் தேதி சென்றுள்ளனா். இளைய மகளான 15 வயது சிறுமி மட்டும், பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாகக்கூறி நிகழ்ச்சிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். அவருக்கு பாதுகாப்பாக இருப்பதாகக்கூறி தமிழ்ச்செல்வனும் வீட்டில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், மது போதையில் இருந்த தமிழ்ச்செல்வன், மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், இதேபோல பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், சிறுமி கா்ப்பமானாா்.