கடன் பிரச்னை: தலைமை ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
கடன் பிரச்னையால் தலைமை ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை...
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியை சோ்ந்தவா் தோ. ஜெரால்டு ராபா்ட் (57). இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா், அப்பகுதி அருகேயுள்ள கரட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தாா்.
இவா், நண்பா்கள், உறவினா்கள் சிலருக்கு கடன் பெற ஜாமீன் கையொப்பமிட்டுள்ளாராம்.
இதில் சில கடன்களில் பொறுப்பேற்ால் கடனை ஜெரால்டு ராபா்டே செலுத்தியும் வந்துள்ளாா். மேலும், சில கடன்கள் நீதிமன்ற வழக்கு வரை சென்ால், மன உளைச்சலில் இருந்துள்ளாா். வியாழக்கிழமை மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவா், குளியல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

