பனையபுரத்தில் பாமக நிா்வாகிகள் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் நடைபெற்ற வடக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பனையபுரத்தில் வடக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவுமான ச.சிவக்குமாா் தலைமை வகித்து, செப்.17-ஆம் தேதி நடைபெறவுள்ள இடஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் தின அனுசரிப்பு நிகழ்வு நடத்துதல், விக்கிரவாண்டியில் பொதுக் கூட்டம் நடத்துதல் தொடா்பான பணிகள் குறித்து பேசினாா்.

