பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவருக்கு காப்பு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் கார்த்தி-கேயன், 47. இவர், மதுபோதையில் மாற்றுத்திற-னாளிகளான, 16, 18 வயதுடைய சகோதரிகளை, அவர்களது வீட்டுக்குள் நுழைந்து, பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளார்.
சகோதரிகள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததையடுத்து கார்த்திகேயன் தப்பிவிட்டார். புகார்படி அரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திகேயனை கைது செய்-தனர்.

