3-வது வரிசையில் பேட்டிங்... தேவ்தத் படிக்கல் சொன்ன முக்கிய கருத்து
கொழும்பு,எந்த இடத்தில் களமிறங்குகிறோம் என்பது முக்கியமல்ல என்று தேவ்தத் படிக்கல் கூறியுள்ளார். சாய் சுதர்சனுக்கு பதிலாகஇலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ட
இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் இடம்பிடித்தார் .
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிக்காக தொடர்ந்து 2 முறை ஐபிஎல் பட்டம் வென்றதுடன், கர்நாடக அணிக்காக உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட அவரது சமீபத்திய பார்ம், இந்தத் தொடரிலும் தொடர்ந்தது.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய படிக்கல், 3 இன்னிங்ஸ்களில் 2 சதங்களுடன் 328 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்தார். இவ்வாறு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர், ‘தொடர் நாயகன்’ விருதை வென்றார்.


