வாலாஜாபாத் பி.டி.ஓ., பொறுப்பேற்பு
காஞ்சிபுரம், செப். 18– வாலாஜாபாத்திற்கு பி.டி.ஓ., எனும் வட்டார வளர்ச்சி அலுவலராக, வீணாஸ்ரீ நேற்று பொறுப்பேற்று
வாலாஜாபாத்திற்கு பி.டி.ஓ., எனும் வட்டார வளர்ச்சி அலுவலராக, வீணாஸ்ரீ நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலராக சூர்யா என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக, சிவகங்கை மாவட்டம், கண்ணக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த வீணாஸ்ரீ என்பவரை காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா நியமித்துள்ளார்.


