குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்
தஞ்சாவூர்,குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இல்லைதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம்
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (51 வயது). இவருடைய மனைவி வித்யா (42 வயது). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாததால் இந்த தம்பதி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தனர். வித்யா, மகிழங்கோட்டை மேலக்காடு பகுதியில் உள்ள தனது அக்கா வனிதா வீட்டில் வந்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற வித்யா, திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீயின் வேதனை தாங்காமல் அவர் சத்தம்போட்டு அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வித்யாவை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

