தீபாவளி பண்டிகை: சிறுமுகையில் கைத்தறி பட்டுச்சேலை தயாரிக்கும் பணி மும்முரம்
கோவை,கைத்தறி நெசவுத்தொழில்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வட்டார பகுதி கைத்தறி நெசவுத்தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சிறுமுகை மற்றும்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வட்டார பகுதி கைத்தறி நெசவுத்தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சிறுமுகை மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஆலாங்கொம்பு, திம்மராயம்பாளையம், மூலத்துறை, வெள்ளிக்குப்பம்பாளையம், கிச்சகத்துர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் நெசவுத்தொழிலை செய்து வருகின்றனர்.
சிறுமுகை வட்டார பகுதியில் உள்ள நெசவுத்தொழிலாளர்கள் காட்டன், கோரா காட்டன், மென்பட்டு, முகூர்த்த புடவைகள், வரவேற்பு புடவைகள், கிப்ட் புடவைகள், சீருடைகள் ஆகிய கைத்தறி பட்டுச்சேலை ரகங்கள் காண்போர் மனதை கவரும் வண்ணம் பல வண்ணங்களில் தயாரித்து வருகின்றனர்.
இதில் மென் பட்டுச்சேலைகள் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறுமுகை வட்டார பகுதியில் இருந்து நெசவுத்தொழிலாளர்கள் தயாரிக்கும் கைத்தறி பட்டுச்சேலைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.


