மல்லசமுத்திரத்தில் இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
மல்லசமுத்திரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் முனியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (56) ஞாயிற்றுக்கிழமை ஆத்துமேட்டில் இருந்து தொட்டிபட்டிக்கு தனது மொபெட்டில் சென்றபோது, முனியப்பன்பாளையம் அருகே எதிரே வந்த ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தை அடுத்த பாலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவராஜ்( 26) ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீஸாா், ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயம் அடைந்த சிவராஜ் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்த மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
