ஊர்க்காவல் படை மாநில போட்டி நாளை துவக்கம்
தேனி, செப்.17– தேனியில் மாநில அளவிலான 30வது ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் செப்., 18 (நாளை)
தேனியில் மாநில அளவிலான 30வது ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் செப்., 18 (நாளை) துவங்குகிறது. ‘அரண் 26 ’தலைப்பில் இப்போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது.
இதில் 12 சரகங்களுக்கு உட்பட்ட 1440 ஊர்க்காவல்படையினர் பங்கேற்கின்றனர். இதில் 180 பெண்கள் அடங்குவர். முதல் முறையாக 7 திருநங்கைகளும் பங்கேற்கின்றனர். தடகளம், கபடி, வாலிபால், பணித்திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் போலீஸ் டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால், தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி, ஊர்க்காவல் படை ஐ.ஜி., ஜெயஸ்ரீ, திண்டுக்கல் டி.ஐ.ஜி., சசிமோகன், ஊர்க்காவல்படை டி.ஐ.ஜி., விஜயலட்சுமி, தேனி எஸ்.பி., பிரவீன் கவுதம், திண்டுக்கல் எஸ்.பி., ஜெயகுமார், ஊர்க்காவல் படை ஓய்வு ஏ.சி.ஜி., கலெக்டர் வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
