கோயில்களில் இரவுக் காவலா் பணி முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 13 கோயில்களில் இரவு நேரக் காவல் பணியில் ஈடுபடுவதற்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 13 கோயில்களில் இரவு நேரக் காவல் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
