”செல்போன் பார்க்க நேரம் இருக்கு; வேலை பார்க்க நேரம் இல்லையா?”; அதிகாரிகளை அலறவிட்ட முதல்வர்
ஆந்திரப் பிரதேசத்தில், முதல்வர் சந்திரபாபு தலைமையில் 8 வது மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசுப் பணிகளில் ஏற்படும் தாமதத்தைக் கண்டித்து, முதல்வர் அதிகாரிகளை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர் பேசுகையில், ”கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகள் குறித்து கவலை தெரிவித்த அவர், அவர்கள் கலந்துகொள்ளாததற்கான காரணங்களுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு நிர்வாகத்தில் கோப்புகள் தேங்கிக் கிடப்பது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், வாட்ஸ்அப் செய்திகளைப் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை, கோப்புகளைத் தீர்வு காண்பதில் அதிகாரிகள் ஏன் காட்டுவதில்லை? செல்போன்களைப் பார்க்கும் அளவுக்குக் கூட கோப்புகளைப் பார்க்க நேரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, சில அமைச்சர்கள் கோப்புகளைப் பார்க்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக எழுந்த புகாரையடுத்து, ”நான்கூட ஒரு கோப்பை ஆய்வு செய்ய அதிகபட்சமாக 4 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். அதே போல, அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கோப்புகளை உடனுக்குடன் பரிசீலித்து அனுப்ப வேண்டும் என்றும், அப்போதுதான் நிர்வாகம் சுறுசுறுப்பாக இயங்கும்” என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
