இல்லத்தரசிகளின் Expo scam 6 மாசம்கூட கெடாத கொழம்பு...குதிரை லாடம் குபேர யோகம்; யார் இந்த Expose மணி Bro?
அய்யா... ஃபுட் சேஃப்டி ஆப்பிசருகளா? ஊருக்குள்ள இருக்கீகளா? இல்ல... ஏதாவது வெளியூரு, டூருகீரு போயிட்டீங்களா? இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்கலாமே? என இன்ஸ்டா கிராமமே கேள்வி எழும்பி வருகிறது.
“அதாகப்பட்டது sir, கடல்ல கப்பல் போகுது, வானத்துல aeroplane போகுது, roadல பஸ்ஸு போகுது. அந்தமாதிரி பயணத்தின்போதுகூட வாங்கமுடியாத பல அரிய பொக்கிஷங்களை, நீங்க போற இந்த ரயில் பயணத்துல வாங்கலாம் சார்” என பிதாமகன் படத்தில் சூர்யா கூவி கூவி விற்பதுபோல...ஆறு மாசம் கெடாத கொழம்பு... சிக்கன், மட்டன், எறாவுல நான் வெஜ் ஊறுகாய் என இன்ஸ்டாகிராம்ல வீடியோவா எடுத்து போட்டு கூவி கூவி வித்துக்கிட்டிருக்காங்க.
இதுபற்றியெல்லாம் இன்ஸ்டாவுல ஒருத்தர், ஐநூறு அறநூறுக்குக்குமேல வீடியோக்களா போட்டு குவிச்சிக்கிட்டிருக்கார். ஆனா, ஆளாளுக்கு இன்ஸ்டாவுல இதுசம்பந்தமா ‘கத்தியின்றி ரத்தமின்றி’ அடிச்சுக்கிட்டு கிடக்கிறாங்களே தவிர, அதுபற்றி சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுக்கிற மாதிரியே தெரியலையே? ” என சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் குறித்து, நெட்டிசன்கள் இப்படித்தான் ட்ரோல் செய்துவருகிறார்கள்.
அதுவும், fssai சர்டிஃபிகேட் எல்லாம் பக்காவா வாங்கித்தான் தயாரிக்கிறோம்னு ஆளாளுக்கு ஒரு சர்டிஃபிகேட்டை வேற காண்பிக்கிறாங்க. இதையெல்லாம் நம்பி, வாங்கி சாப்பிடலாமா? வேண்டாமா? என குழம்பவைக்கும் குழம்பு மட்டுமல்ல, இல்லத்தரசிகள்- தொழில் முனைவோர் என்கிற பெயரில் திரும்புன திசையெல்லாம் நடத்தப்படும் “எக்ஸ்போக்கள்”, குதிரையின் காலிலிருந்தே கழட்டப்பட்ட குதிரை லாடத்தால் ஏற்படும் யோகம் என அடித்துவிடும் “குதிரை லாட லேடி” , சுரக்காய் குடுவை... கும்பம் மந்திர தகடு..என எக்கச்சக்கமான ஸ்கேம்கள் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
