அக்டோபரில் 17ல் காவிரி தீர்த்த உத்சவம்
பெங்களூரு: காவிரி தாயை போற்றும் வகையில், அக்டோபரில் 17ம் தேதி காவிரி தீர்த்த உத்சவம் கொண்டாடப்பட உள்ளது.
கர்நாடகா - தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இந்த அணையின் நீர் ஆதாரமாக குடகின் பாகமண்டலாவில் உள்ள தலைக்காவிரி உள்ளது.
காவிரி தாயை போற்றி நன்றி செலுத்தும் வகையில், ஆண்டிற்கு ஒரு முறை தலைக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

