விநாயகரை வணங்கிய யானை ராமலட்சுமி... ராமேஸ்வரம் ஊர்வலத்தில் நெகிழ்ந்த பக்தர்கள்
மேற்கு கோபுர வாசல் பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்த கோயில் யானை ராமலட்சுமி, விநாயகர் ஊர்வலத்தைக் கண்டதும் தனது தும்பிக்கையை உயர்த்தி வழிபட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், கோயில் யானை ராமலட்சுமி விநாயகரை தனது தும்பிக்கையை உயர்த்தி வழிபட்டது. இந்த நிகழ்வு பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.


