இடைத் தோ்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம்: எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் இடைத் தோ்தல்களில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.
விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.
விழுப்புரத்தில் கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னா், அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசாங்கத்தின் கஜானா காலியாக உள்ளது என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழக அரசு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை ரூ.1,200 கோடியில் கட்டவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இது, அந்தப் பகுதியிலுள்ள மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய செயலாகும்.


