பிரிக்ஸ் கூட்டத்துக்கு டெல்லி வந்த புடின்... கவனம் ஈர்த்த 'Doomsday Plane'!
Putin Arrives in Delhi Aboard 'Doomsday Plane' — Here's What Makes It Special
இந்த விமானத்தின் முக்கிய சிறப்பு அதன் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகளாகும். செயற்கைக்கோள் தொடர்பு, பாதுகாக்கப்பட்ட ரேடியோ மற்றும் தரவுத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18-வது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பயணத்தில், அவரது சிறப்பு விமானமான 'Doomsday Plane' கவனம் ஈர்த்துள்ளது. தகவல் தொடர்பு மற்றும் கட்டளைப் பணிகளுக்காக இந்த விமானம் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புடினின் பயணத்துக்குப் பயன்படுத்தப்படும் இந்த விமானம் Ilyushin ll-96-300PU வகையைச் சேர்ந்தது. இதில் உள்ள 'PU' என்ற குறியீடு, Punkt Upravleniya எனப்படும் 'Command Post' என்பதைக் குறிக்கிறது. சாதாரண பயணிகள் விமானமான ll-96-ஐ அடிப்படையாகக் கொண்டு, அதிபரின் பயணம் மற்றும் முக்கிய தகவல் தொடர்புத் தேவைகளுக்காக இந்த விமானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


