மத்துாரில் பிரமாண்ட விநாயகர் ஊர்வலம்
மாண்டியா: கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்ட மாண்டியாவின் மத்துார் பகுதியில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைமையில் பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நேற்று நடந்தது.
மாண்டியா மாவட்டம், மத்துாரில் உள்ள ஜாமியா மசூதிக்கு முன், கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலம் சென்ற போது, மசூதியில் இருந்து சிலர், விநாயகர் சிலை மீது கல்வீசினர். இச்சம்பவம் வன்முறையாக வெடித்தது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை கண்டித்து, மத்துார் ஜாமியா மசூதிக்கு முன் நேற்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைமையில் நடத்தப்பட்டது. இதில், எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., -- எம்.எல்.சி., - சி.டி.ரவி, ஹிந்து அமைப்பினர், பக்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

