மணல் திருட்டு! தி.மு.க. கொறடாவுக்கு குறி!
"கனிமவளக் கொள்ளை யில் முன்னாள் அமைச்சர்கள் சிக்குவார்கள், சிறை செல்வார்கள்'' என சட்டசபையில் கூறியுள்ளார் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. தி.மு.க. கொறடா எ.வ.வேலுவை மனதில் வைத்துதான் இப்படி கூறினார். எ.வ.வேலுவை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் ஒன்றை தந்துள்ளது, அதுகுறித்து விசாரணையும் நடக்கிறது என்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க. வடக்கு மண்டலத்தின் சார்பில் இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுகம், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி என பிரமாண்டமான மாநாடுகள் திருவண்ணாமலையை அடுத்துள்ள மலப்பாம்பாடி கிராமத்திலுள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் குமரனுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது. அந்த இடத்தில் சட்டவிரோதமாக ஏரி மண்ணை அள்ளிவந்து கொட்டி நிரப்பி, அந்த இடம் சமன்படுத்தப்பட்டது என அறப்போர் இயக்கம் புகார் தந்துள்ளது. அந்த புகாரில், "மலப்பாம்பாடி ஏரி (சர்வே எண் 58) 12 ஏக்கர் பரப்பளவு உள்ளது, இதிலிருந்து 3 முதல் 7 மீட்டர் ஆழத்துக்கு 45 லட்சம் கனஅடி மண்ணை அள்ளியெடுத்து தி.மு.க. மாநாடு நடந்த இடத் தில் கொட்டி சமன் படுத்தப்பட்டுள்ளது, இதனால் 8 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. மாநாடு நடந்த இடம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் குமரன் உரிமையாளராகவுள்ள அருணை புராடக்ட்ஸ் அண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் துக்கு சொந்தமானது. 124.56 ஏக்கர் இடத்தினை 12.6.2024-ல் ரிஷி எண்டர்பிரைசஸ் நிறுவனத் திடமிருந்து வாங்குகிறார். இந்த நிறுவனம் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான பாண்டித் துரைக்கு சொந்தமானது. பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவருக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் விற்பனை செய்துள்ளார். வெறும் 36 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அங்கே ஒரு சென்ட் 1 முதல் 1.5 லட்சம் வரை விற்பனையாகிறது. 124 ஏக்கர் 200 கோடி ரூபாய் மதிப்புடையது. ஆனால் குறைந்த விலைக்கு வாங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அரசுக்கும் நட்டம் ஏற்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டு புகாரனுப்பியுள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளதா என லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ததோடு, இதுகுறித்து அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் அனுப்பி யுள்ளது.
புகார்கள் குறித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் பேசியபோது, "சட்டப்படி எனக்கும் மாநாடு நடந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. ஜெ. காலத்தில் என்மீது வழக்கு போட்டாங்க. 2021-ல் வருமான வரித்துறை ரெய்டு நடத்துனாங்க. நான் அமைச்சரா இருந்த 2023-ல் மீண்டும் வருமானவரித்துறை ரெய்டு செய்தாங்க. பொய்யான வழக்கு என வழக்கே ரத்து செய்யப்பட்டது. வருமானவரித்துறை வழக்கிலும் விசாரணைக்குப்பின் "நான் சரியாக வரி கட்டியிருக்கிறேன், எந்த தப்பும் இல்லை, நான் க்ளீன்' என என்.ஓ.சி. சர்ட்டிபிகேட் தந்திருக்காங்க. அதேபோல் என் மகன்கள் தனித்தனியா ஐ.டி. கட்டறாங்க. இங்க ட்ரஸ்ட் தனியா இருக்கு. அதுக்கு தனியா ஐ.டி. ஃபைல் செய்யறாங்க. என் மகன் குமரன், அருணை புராடக்ட்ஸ் அன்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் ஒரு இயக்குநரா இருக்காரு. அவரைப்போல் இன்னும் சிலர் இருக்காங்க. அந்த நிறுவனத்தின் பெயரில் தான் மாநாடு நடந்த இடம் இருக்கு. அந்த


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
