மதுரை முனியாண்டி கோவிலில் கிடாய் வெட்டு திருவிழா: 25,000 பேருக்கு பிரமாண்ட கறிவிருந்து
மதுரை,மதுரை முனியாண்டி கோவிலில் நடைபெற்ற கிடாய் வெட்டு திருவிழாவில் சுமார் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கிடாய் வெட்டு திரு
மதுரை முனியாண்டி கோவிலில் நடைபெற்ற கிடாய் வெட்டு திருவிழாவில் சுமார் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் புகழ்பெற்ற 4-வது கழுங்கடி அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 38-வது ஆண்டு கிடாய் வெட்டு திருவிழா மற்றும் மாபெரும் சமபந்தி கறிவிருந்து அன்னதானம் இன்று (சனிக்கிழமை) பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் 450 ஆட்டுக் கிடாய்கள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடிய விடிய 10,000 கிலோ அரிசி மற்றும் டன் கணக்கிலான மசாலாப் பொருட்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் கறிவிருந்து தயார் செய்யப்பட்டது.


