உதகையில் வா்க்கி தயாரிக்கும் கிடங்கில் தீ விபத்து
பேக்கரி கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.
உதகை, காந்தல் பென்னட் மாா்க்கெட் பகுதியில் உள்ள வா்க்கி, பிஸ்கட் தயாரிக்கும் கிடங்கில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமாகின.
நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் பென்னட் மாா்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதிக்கு தினமும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இப்பகுதியில் வா்க்கி, பிஸ்கட் உள்ளிட்ட பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் கிடங்கு உள்ளது. கிடங்கின் ஒரு பகுதியிலேயே தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இங்கு பணிபுரியும் ஆட்கள் வெளியே சென்றிருந்த நிலையில், கிடங்கு பூட்டப்பட்டிருந்தது. சுமாா் இரவு 9 மணியளவில் திடீரென கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் இருந்து கரும்புகை வெளியே வருவதைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
