மது அருந்திய வடமாநிலத்தவரை விசாரித்த போலீஸ்; பதிலுக்குத் தாக்கினார்களா இளைஞர்கள்? என்ன நடந்தது?
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய மூன்று வட மாநிலத் தொழிலாளர்களைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் கணேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி மேற்பார்வையில் அரசு மதுபானக் கடை அருகே ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மூன்று இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட காவலர் கணேசன், அங்கு மது அருந்தியது குறித்து அவர்களிடம் விசாரித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து காவலர் கணசேன் சட்டையைப் பிடித்து, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

