நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா?
சென்னை, நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக இங்கே காண்போம். சட்டசபை கூட்ட அரங
105 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சட்டசபை வரலாற்றில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே மெட்ராஸ் மாகாணமாக இருந்த நேரத்தில், 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி, முதல் முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது.
இடையில், செனட் ஹவுஸ் (1937-1938), ராஜாஜி அரங்கம் (1938-1939), கலைவாணர் அரங்கம் (1952-1956), அரன்மோர் அரண்மனை, ஊட்டி (1959 - 10 நாட்கள்), ஓமந்தூரார் அரசினர் தோட்டம் (2010-2011) (தற்போதைய அரசு பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிடம்) ஆகிய இடங்களுக்கு இடம்மாறினாலும், 98 ஆண்டுகளாக தடம் மாறாமல் புனித ஜார்ஜ் கோட்டை அரங்கத்திலேயே சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, "நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்" என்று அவர் அறிவித்தார்.

