ஆசிரியர்கள் பெயருக்கு முன் டிஆர் சேர்த்துக்கோங்க: கர்நாடக முதல்வர் சிவகுமார் அறிவிப்பு
பெங்களூரு: ''ஆசிரியர்கள் இனி தங்கள் பெயருக்கு முன், ஆங்கிலத்தில் டீச்சர் என்பதை குறிக்கும், 'டிஆர்.,' என்ற குறியீட்டை சேர்த்து கொள்ளலாம்,'' என, கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையிலா காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள விஜயநகரா மாவட்டத்தில் நேற்று 'மக்கள் சேவை' திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
ஒரு தேசத்தை உருவாக்கும் ஒவ்வொரு நபருக்கும் பின்னால், அவரை வடிவமைத்த ஒரு ஆசிரியர் இருக்கிறார். கர்நாடகாவில் உள்ள 4.5 லட்சம் ஆசிரியர்கள் உட்பட, நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள், ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மனங்களையும், ஆளுமைகளையும், எதிர்காலத்தையும் வடிவமைத்து வருகின்றனர்.

