ஊட்டி மருந்தியல் கல்லுாரியில் ‘ரோபோ’ யானையுடன் ஊர்வலம்
ஊட்டி : ஊட்டி ஜே.எஸ்.எஸ்., மருந்தியல் கல்லுாரியில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில் விநாயகருக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து விசர்ஜன ஊர்வலம் நடந்தது. சிறப்பு அம்சமாக ‘ரோபோ’ யானையுடன் விநாயகர் ஊர்வலமாக நடந்தது. தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலாசார போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் தனபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
