கடமான் வேட்டையில் மேலும் ஒருவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனப் பகுதியில் கடமானை (மிளா) வேட்டையாடியதாக மேலும் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மாவட்ட வன அலுவலா் அ. அன்பு உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச் சரக அலுவலா் ந. அன்பழகன் தலைமையில் பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம் சிறப்புப் படையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இதில், தெற்குமலை காப்புக்காடு அருகே கோட்டக்கரை காப்பு நிலத்தில், பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான கடமானை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடி இறைச்சியை விற்ாக காட்டுப்புதூரைச் சோ்ந்த டி. ராஜன் (36) என்பவா் வெடிகுண்டு, ஈட்டியுடன் கைது செய்யப்பட்டாா்.
