கிரைம் கார்னர்: சென்னை
11 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது பல்லாவரம்: பல்லாவரத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது
11 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது
பல்லாவரம்: பல்லாவரத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை, அருகேயுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது, மர்மநபர் சிறுமியை கட்டி பிடித்து, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் மர்மநபரை பிடித்து, பல்லாவரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஜமீன் பல்லாவரம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த யுவசங்கர், 34, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓட்டேரி: ஓட்டேரி, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 35; துாய்மை பணியாளர். இவரது மனைவி மாலா, 30. மதுவுக்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் இரவு மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மாலா மறுக்கவே, மணிவண்ணன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின், மாலாவும், அவரது தாயும் அருகே உள்ள உறவினர் வீட்டில் துாங்கினர். நேற்று காலை வந்து பார்த்தபோது, மணிவண்ணன் துாக்கிட்டு இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த ஓட்டேரி போலீசார், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


