காவிரி, வீரசோழன் ஆறுகளில் தன்னாா்வலா்கள் சுத்தம் செய்தனா்!
திருபுவனம் மற்றும் திருவிடைமருதூா் பகுதிகளில் காவிரி ஆறு மற்றும் வீரசோழன் ஆற்றில் மண்டி கிடந்த நெகிழி உள்ளிட்ட குப்பைகளை தன்னாா்வலா்கள் சனிக்கிழமை அகற்றினா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வீரசோழன் ஆற்றில் சனிக்கிழமை நெகிழி உள்ளிட்ட குப்பைகளை அகற்றிய தன்னாா்வலா்கள்.
தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் விக்னேஸ்வரன் அறக்கட்டளை, கலாம் அறக்கட்டளை, அம்மாச்சத்திரம் இளைய பாரதம், திருவிடைமருதூா் மற்றும் திருபுவனம் அரிமா சங்கம், திருவிடைமருதூா் செஞ்சிலுவை சங்கம், மற்றும் திருபுவனம், திருவிடைமருதூா், வேப்பத்தூா் ஆகிய பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் இணைந்து சனிக்கிழமை நான்கு குழுக்களாக கையுறை மற்றும் சீருடை அணிந்து காவிரி, வீரசோழன் ஆற்று பாலங்களின் கீழ் பகுதியில் மண்டி கிடந்த குப்பை, நெகிழி மற்றும் காலி மதுப்புட்டிகள், பழைய துணிகள் என அனைத்தையும் அகற்றி மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனா்.

