சமூகநீதி குறித்து திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை! - வன்னி அரசு
சென்னை,சமூகநீதி குறித்து எமது தலைவர் தொல்காப்பியன் திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை! என சமூகநீதித்துறை அமைச்சரும் விசிக துணை பொதுச்செயலாளருமா
சமூகநீதி குறித்து எமது தலைவர் தொல்காப்பியன் திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை! என சமூகநீதித்துறை அமைச்சரும் விசிக துணை பொதுச்செயலாளருமான வன்னி அரசு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு சனவரி 8 அன்று 103வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. அடுத்த நாள் சனவரி 9 அன்று மாநிலங்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. சனவரி 12 இந்த சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதனை எதிர்த்து எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் முனைவர் ரவிக்குமார் இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு (W.P.(C) No. 182/2019) தொடர்ந்தனர். இந்த வழக்கில் நாட்டிலேயே மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்ட அறிஞரான வழக்கறிஞர் கௌதம் பாட்டியா தலைமையிலான வழக்கறிஞர் குழு EWS சட்டத்தை எதிர்த்து மிகவும் விரிவான 70 பக்க Affidavit தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா அவர்கள் தலைவர் எழுச்சித்தமிழர் சார்பில் 34 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்பித்தும், நேரில் வாதாடவும் செய்தார். எமது தலைவர் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் வழக்கில் 2022 நவ. 11 அன்று பொருளாதார அளவுகோலின்படி இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு 3:2 என்ற கணக்கில் தீர்ப்பளித்தது.



