பஹாமாஸ்: சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
நசாவு,பஹாமாசில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அட்லாண்டிக் பெங்கடலில் அமைந்துள்ள கரீ
பஹாமாசில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
அட்லாண்டிக் பெங்கடலில் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடு பஹாமாஸ். இந்நாட்டில் ஏராளமான தீவுகள் உள்ளன. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் இந்நாட்டிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மரியோ லமர் (வயது 80). இவரது மனைவி லில்லி லமர் (வயது 79). இந்த தம்பதி தங்கள் பேரப்பிள்ளைகளான சோபி சோசா (வயது 28) மற்றும் கிறிஸ்டின் சோசா (வயது 22) உடன் சிறிய ரக விமானம் மூலம் பஹாமாசுக்கு சுற்றுலா சென்றுள்ளார். விமானத்தை மரியோ லமர் இயக்கினார். விமானியான மரியோ லமர் 40 ஆண்டுகள் விமானத்தை இயக்கி அனுபவம் பெற்றவர் ஆவார்.

