ஆரியங்காவு சோதனைச்சாவடியில் ரூ.13 லட்சம் காரில் பறிமுதல் 2 பேர் கைது
நாகர்கோவில்: கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனை சாவடியில் நடந்த சோதனையில் காரிலிருந்து ரூ.13 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கேரள தமிழக எல்லையான ஆரியங்காவு சோதனை சாவடியில் கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் திடீரென ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த காரை சோதனையிட்ட போது அதில் கட்டு கட்டுகளாக ரூ.13 லட்சம் இருந்தது. பணத்திற்கான போதிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. அவர்கள் சரியான விளக்கமும் அளிக்கவில்லை.
காரிலிருந்த சேலத்தைச் சேர்ந்த ஏழுமலை சின்னப்பன், சக்தி சுப்பிரமணி ஆகியோரை கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர். சேலத்தில் இருந்து எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூருக்கு இந்த பணத்தை கொண்டு செல்வதாக அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.


