ஆட்டு வியாபாரியிடம் ரூ.2.45 லட்சம் பறிமுதல்
தாராபுரம், செப். 11– தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா மற்றும்
தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா மற்றும் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரம் – உடுமலை ரோட்டில் குண்டடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர் தலைமையில், எஸ்.ஐ. கலையரசி உள்ளிட்டோர் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது, உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்த ஆடு வியாபாரி தங்கவேல், 65, என்பவரின் காரை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2.45 லட்சம் ரூபாய் இருப்பது தெரிந்து, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

