நீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு
நீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30 சதவீதமாக குறைக்கத் தயாா் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
நீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பின் 1,857 இடங்கள் காலியாக உள்ள நிலையில், தகுதி மதிப்பெண்ணை 50 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவ (அறுவை சிகிச்சை தொடா்புடைய) இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்காக நடத்தப்பட்ட நீட்-சிறப்பு மருத்துவத் தோ்வின் கலந்தாய்வு முடிவில் 152 மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருந்தன. இதைத் தொடா்ந்து இந்த காலியடங்கள் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டன. இதற்கு எதிராக தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.





