டவுட் தனபாலு
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழகம் முழுதும் நிலவும் கடுமையான மின்வெட்டு, மக்களின்
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்:
தமிழகம் முழுதும் நிலவும் கடுமையான மின்வெட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது. குறுவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கு மின் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகளும், மக்களும் கண்ணீர் வடிக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததுமே மக்களை இருளில் தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் த.வெ.க., அரசு, மின் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பா.ஜ., போராட்டங்களை முன்னெடுக்கும்.
நீங்களும் அடிக்கடி, 'போராட்டங்களை முன்னெடுப்போம்'னு தான் சொல்றீங்க... ஆனா, ஒரு போராட்டம் கூட நடத்த மாட்டேங்கிறீங்களே... உங்க கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை அளவுக்கு உங்களால கூட்டம் சேர்க்க முடியாதுன்னு தயங்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

