சபாநாயகரிடம் ஏழரை கேள்விகள்
நேரலை நாயகரே...மாண்புமிகு உறுப்பி னர் அமருங்கள்; மாண்புமிகு உறுப்பினரை எச்சரிக்கிறேன்;
நேரலை நாயகரே...
'மாண்புமிகு உறுப்பி னர் அமருங்கள்; மாண்புமிகு உறுப்பினரை எச்சரிக்கிறேன்; மாண்புமிகு அவை முன்னவர் பேசலாம்; மாண்புமிகு உறுப்பினர் கே.என்.நேரு அவர்கள்...' - இப்படியாக, சற்றும் அசராது அசத்தும் நம் 'மாண்புமிகு' சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அரசியல் பயில விரும்பும் தமிழக மக்களின் சில கேள்விகள்...
1 'ஜனநாயகம் எனும் போர்வை போர்த்தி ஆடிய 'வாரிசு' அரசியல், 'மாற்றம்' விரும்பிய ஜனநாயகனால் ஒழிந்துவிட்ட சூழலில், 'ஜனநாயக' சட்டசபையில் 'மாண்புமிகு' அடைமொழி இத்தனை முறை உச்சரிக்கப்பட வேண்டுமா?


