பள்ளி மாணவர்களுக்கு ‘இஸ்ரோ’ கட்டுரை போட்டி
கோவை: இஸ்ரோவின் உந்து வளாகம் மகேந்திரகிரி சார்பில், உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடத்துகிறது.
‘வருங்கால ஏவுகலன்கள்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலத்தில் போட்டி நடத்தப்படும். 9,10,11 மற்றும் பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்களின் கையெழுத்தில், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் என ‘ஏ’4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.

