தொழில்நுட்ப கோளாறு: மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் சென்னையில் தரையிறக்கம்
சென்னை,மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சவ
மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு இன்று மாலை மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 186 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் சென்னை அருகே வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் அனுமதி கேட்டனர். இதையடுத்து, சென்னை விமான கட்டுப்பாட்டு மையம் விமானம் தரையிறங்க அனுமதி அளித்தது.


