ராஜராஜேஸ்வரி டிம்பர் மார்ட் மரக்கடை திறப்பு விழா
ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல்- பழநி ரோட்டில் ரெட்டியார்சத்திரம் கதிரனம்பட்டியில் ராஜராஜேஸ்வரி டிம்பர் மார்ட் மரக்கடை திறப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் பெரியசாமி, கட்டடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், தி.மு.க., மாவட்டப் பொருளாளர் சத்தியமூர்த்தி, அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன், த.வெ.க., மத்திய மாவட்டச் செயலாளர் தேவா முன்னிலை வகித்தனர். உரிமையாளர் அன்பரசு, கொத்தப்புள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் சுந்தரி ஆகியோர் வரவேற்றனர்.
நிறுவன சிறப்பம்சங்கள் குறித்து உரிமையாளர்கள் கூறியதாவது: இங்கு மரம், கண்ணாடி ஆகிய மூலப் பொருட்களின் மூலம் பல்வேறு வகைகளில் கதவு, ஜன்னல், நிலை, வீட்டின் உள் அலங்கார, வெளி அலங்கார, வரவேற்பறை, பிற இடங்களுக்கான தளவாடப் பொருட்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. இவற்றுக்கு என குளிரூட்டப்பட்ட தனித்தனி அறைகளில், பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவையை கருதி காட்சிப் படுத்தப்பட்டு உள்ளன. தரமானப் பொருட்களின் தனித்துவமான வடிவமைப்பு, கைதேர்ந்த கலைஞர்களை கொண்டு விருப்பத்திற்கு ஏற்ற முறையில் தயாரித்து குறித்த நேரத்தில் வழங்கப்படும்., என்றனர். திருப்பூர் டி.ஏ.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் திருவாசகமணி, திருப்பூர் ஸ்விப்ட் மெர்ச்சண்டைஸ் நிறுவன உரிமையாளர் காந்தி, அருணா சேம்பர் உரிமையாளர் மணிகண்டன், பாதாள செம்பு முருகன் கோயில் ஆதீனம் அறிவாதீனம், வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயில் சென்னமநாயக்கர், ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன், தொழில் உரிமையாளர்கள் விருதுநகர் மணிவாசகம், சுருளிராஜன், தாடிக்கொம்பு சந்திரசேகர், மீரா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகி சிவா, கட்டடப் பொறியாளர்கள், தச்சு தொழிலாளர்கள், வர்த்தகர்கள், கிரஷர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


